எங்களைப் பற்றி
மேற்குத் தொடர்ச்சி மலையின் இதயத்திலிருந்து
கன்னியாகுமரியில் பேச்சிப் பாறைக்கு அருகில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மையப் பகுதியில் வாழும் காணி பழங்குடியின பெண்களில் ஆர்வமுள்ளவர்கள் உருவாக்கிய முன்னெடுப்புதான் நாஞ்சில் நாடு காணி பழங்குடியின பெண்கள் உருவாக்க கூட்டமைப்பு. இது பழமையான காடுகளைப் போலவே ஆழமான வேர்களைக் கொண்ட ஒரு பாரம்பரியமான கூட்டமைப்பாகும். பழங்குடியின மகளிர் தங்கள் பாரம்பரியத்துடன் புதுமைகளைப் புகுத்தி புதிய படைப்புகளை உருவாக்கி வருகின்றனர். இவை அனைத்துமே இந்த சமூகத்தை அதிகாமிக்கவர்களாக மாற்றவும் பாரம்பரியத்தை பாதுகாப்பதற்குமான முயற்சியாகும். மேற்குத் தொடர்ச்சி மலையின் செழுமையை உங்கள் வீட்டிற்கு மட்டுமல்ல, உலக அரங்கிற்குக் கொண்டு செல்வதே இதன் நோக்கமாகும்.

எங்களுக்கு ஆதரவளிப்போரால் பெருமை கொள்கிறோம்.



உபயோகித்தவர்களின் கருத்துகள்
கடந்த சில வாரங்களாக உங்களின் தயாரிப்பான தேனை பயன்படுத்துகிறோம், எங்களது வழக்கமான காலை நேர செயல்பாடுகளை மிகச் சிறப்பாக்கிய உணவில் இது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு ஸ்பூனாக உணவில் சேர்க்கும்போது அது மேலும் ஜொலிப்பதோடு சுவையை அதிகரித்து சிறந்த அனுபவத்தை அளிக்கிறது.
டேவிட் ராஜா
கடந்த காலங்களில் பிற சத்து உணவுகளை நான் பயன்படுத்தியிருந்தேன், ஆனால் உங்களின் தயாரிப்புக்கு இணை ஏதும் கிடையாது. உயரிய தரம் மற்றும் மிகுந்த சுவையுடன் உள்ளது. நான் உங்கள் வாடிக்கையாளராகத் தொடர்வது நிச்சயம்.
தாரணி
என் வீட்டின் சமையலறையில் கருப்பு மிளகு, கிராம்பு மற்றும் பட்டையின் நறுமணம் சூழ்ந்துள்ளது. தரமான தயாரிப்புகளை நீங்கள் வழங்குவதற்கு இதுவே சிறந்த சான்றாகும். மிக்க நன்றி
தீபா
தயாரிப்புகள்
தேன் இஞ்சி 200 கிராம்
₹190.00தேன் அத்தி 200 கிராம்
₹220.00மலைத் தேன்
₹150.00 – ₹600.00கம்புத் தேன்
₹215.00 – ₹800.00
